‘AAA’ திரைப்படத்தின் ஒரிஜினல் கதை தான் ‘Good Bad Ugly’ திரைப்படமா?

Good Bad Ugly Is Orginal Version Of AAA Fact Here Idamporul

Good Bad Ugly Is Orginal Version Of AAA Fact Here Idamporul

நடிகர் சிலம்பரசன் – இயக்குநர் ஆதிக் இணைவில் உருவாகி வெளியான ’AAA’ திரைப்படத்தின் ஒரிஜினல் கதை தான், தற்போது நடிகர் அஜித்குமார் அவர்கள் நடித்து வரும் ‘Good Bad Ugly’ என ஒரு கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, சிலம்பரசன் – இயக்குநர் ஆதிக் இணைவில் உருவாகி வெளியான திரைப்படம் தான் AAA. படம் உருவாக்கத்தில் இருந்து வெளியாகும் வரையிலும், ஏன் வெளியான பின்பும் கூட பல சர்ச்சைகளை கிளப்பியது இத்திரைப்படம். இப்படத்திற்காக ஆதிக் எழுதிய மொத்த கதையையும் நடிகர் சிலம்பரசன் மாற்றி அமைத்ததாக அப்போதே கூறப்பட்டது. படம் வெளியான பின்பு சிலம்பரசன் கேரியரில் ஒரு பிக்கஸ்ட் பிளாப் ஆக இது அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்த AAA திரைப்படத்தின் ஒரிஜினல் கதையை தான், இயக்குநர் ஆதிக் அவர்கள் தற்போது நடிகர் அஜித்குமார் அவர்களுடன் ‘Good Bad Ugly’ என எடுத்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இதன் உண்மைதன்மை குறித்து சரியாக தெரியவில்லை என்றாலும் கூட AAA திரைப்படத்தில் பனியாற்றிய ஒரு சிலர் இந்த கருத்தை ஆமோதிக்கின்றனராம்.

“ என்ன எதுவோ ஒரு அஜித் ரசிகனாக ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு ஒரு சிறந்த ப்ளாக்பஸ்டரை கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். Fan Boy சம்பவம் லோடிங் என்கின்றனர் பார்க்கலாம் “

About Author