தெலுங்கில் கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் ஐஸ்வர்யா மேனன்!
Iswarya Menon Acting In Telugu In Leading Role Idamporul
நடிகை ஐஸ்வர்யா மேனன் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக களம் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தீயா வேலை செய்யனும் குமாரு, நான் சிரித்தால் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த ஐஸ்வர்யா மேனன் தற்போது ’ஸ்பை’ என்ற தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அவதாரம் எடுக்க இருக்கிறாராம். இதற்காக சண்டை மற்றும் துப்பாகி சுடுதலில் எல்லாம் கூடுதல் கவனம் செலுத்தி பயிற்சி எடுத்து வருகிறாராம்.
“ தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு வாய்ப்பிற்கு தாவி இருக்கும் ஐஸ்வர்யா மேனன் அங்காவது ஜொலிப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “