உலகளாவிய அளவில் 300 கோடி வசூலை கடந்து இருக்கும் ‘ஜெயிலர்’!
Jailer Collects 300 Crores In World Wide Idamporul
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகளாவிய அளவில் 300 கோடி வசூலை எட்டி இருக்கிறது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இணைவில் உருவாகி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மெகா ஹிட் வரிசையில் இடம்பிடித்து இருக்கிறது. இந்த நிலையில் படம் உலகளாவிய அளவில் பாக்ஸ் ஆபிஸ்சில் 300 கோடிக்கும் மேலாக வசூலித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது.
படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் தனித்தனியாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதுவே இயக்குநர் நெல்சனின் மிகப்பெரிய வெற்றி. படத்தின் ஒவ்வொரு சீன் எலிவேசன்களிலும் மாஸ் பற்றி எரிகிறது. இந்த நெருப்பை அப்படியே நெல்சன் வைத்துக் கொண்டால் போதும், நிச்சயம் கோலிவுட்டில் நெல்சன் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருவார்.
” படம் எல்லா பக்கமும் நல்ல ரிவ்யூக்களை பெற்று வருவதால், நிச்சயம் 500 கோடியை வசூல் அடிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை “