உலகளாவிய அளவில் 450 கோடி வசூலை ஈட்டியது ‘ஜெயிலர்’!
Jailer Collects 450 Crores In WW With In 6 Days Idamporul
உலக்ளாவிய அளவில் 450 கோடிக்கும் மேலான வசூலை ஈட்டி இருக்கிறது நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர்.
இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் அவர்களின் இணைவில் வெளியாகி இருந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகளாவிய அளவில் 450 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. பொன்னியின் செல்வன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களின் வாழ்நாள் வசூலை 6 நாட்களுக்குள் முறியடித்து நடிகர் ரஜினிகாந்த், மீண்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
இன்னமும் உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் ஜெயிலர் ஹவுஸ்புல்லாக தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. இன்றைய நாள் இறுதிக்குள் வசூல் 500 கோடியை எட்டி விடும் எனவும் கூறப்படுகிறது. ஒட்டு மொத்தமாக நடிகர் ரஜினி அவர்களுக்கு 2.0 திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்து இருக்கிறார் நெல்சன்.
“ கிட்டதட்ட ஜெயிலர் திரைப்படத்திற்காக நெல்சன் தினமும் 20 மணி நேரம் உழைத்ததாக கூறப்படுகிறது. நிச்சயம் இந்த மிகப்பெரிய வெற்றி அவருக்கு கிடைக்க வேண்டிய வெற்றியே “