எப்படி இருக்கிறது ’ஜெயிலர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர்?
Jailer Showcase Review Idamporul
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ‘பேட்ட’ திரைப்படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் அவர்களை இயக்குநர் நெல்சன் பக்காவாக யூஸ் பண்ணி இருக்கிறார். ட்ரெயிலரின் ஒவ்வொரு காட்சியும் மனதில் பதிகிறது. அனிருத் பிஜிஎம்மில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார். நிச்சயம் நெல்சன் வெல்வார் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது ட்ரெயிலர்.
படத்திற்காக இயக்குநர் நெல்சன் கிட்டதட்ட ஒவ்வொரு நாளும் 20 மணி நேரத்திற்கு மேலாக உழைத்ததாக கூறப்படுகிறது. பீஸ்ட் திரைப்படத்திற்கு பின்னரும் கூட, நெல்சனை ரஜினிகாந்த் அவர்களும், சன்பிக்சர்ஸ் நிறுவனமும் நம்பி கொடுத்த வாய்ப்பை அவர் நன்றாக பயன்படுத்தி இருக்கிறார் என்பதை ட்ரெயிலர் பார்க்கும் போது புலப்படுகிறது.
“ ஆகஸ்ட் 10 முதல் உலகளாவிய அளவில் வெளியாக இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை வாங்க விநியோகஸ்தர்களிடம் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. நிச்சயம் பல பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகள் உடைய வாய்ப்பு இருக்கிறது “