ஒரே நாளில் வாரிசு, துணிவின் வாழ்நாள் வசூலை தூக்கி அடித்த ஜெயிலர்!
Jailer Broke Life Time Box Office Record Of Varisu Thunivu In One Day Idamporul
அமெரிக்காவில் ஒரே நாளில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வாழ்நாள் வசூலை முறியடித்து இருக்கிறது ஜெயிலர்.
இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் மட்டும் ஒரே நாளில் 1.5 மில்லியன் டாலர் வசூல் செய்து, வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வாழ்நாள் வசூலை தூக்கி சாப்பிட்டு இருக்கிறது ஜெயிலர்.
72 வயதில் இனி இவரால் என்ன பண்ண முடியும் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும், தனது பாக்ஸ் ஆபிஸ்சின் மூலம் இன்னமும் பதில் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அவரைப்போல் சொல்ல வேண்டுமானால் இன்னமும் இந்த குதிரை ஓடிக் கொண்டே தான் இருக்கிறது.
“ எல்லா இடங்களில் இருந்தும் பாசிட்டிவ் ரிவ்யூக்கள் வர ஆரம்பித்து விட்டதால் ‘ஜெயிலர்’ நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ்சில் ரெக்கார்டுகளை சொல்லி உடைக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை “