தற்போது உள்ள இசை எல்லாம் மனதில் நிற்பதில்லை – ஜேம்ஸ் வசந்தன்
தற்போது உள்ள இசை எல்லாம் மனதில் நிற்பதில்லை என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு ஒரு பாடலை பாடி இருப்பார், இசை எதுவுமே இருக்காது, ஆனாலும் மனதில் ஒரு தாக்கம் இருக்கும். அதுவே ஏ ஆர் ரஹ்மான். ஆனால் தற்போதெல்லாம் பாடல்கள் ரீல்ஸ்களுக்காக மட்டுமே உருவாக்கப்படுகிறது, பீட் மட்டுமே இருக்கிறது ஆனால் மனதில் காலம் கடந்து நிற்பதில்லை என ஜேம்ஸ் வசந்தன் கூறி இருக்கிறார்.
அதற்காக நான் அனிருத்தை சாடுகிறேன் என்று நினைக்க வேண்டாம். இசை என்றால் காலம் கடந்து நிற்க வேண்டும் என்றே சொல்கிறேன். இது ஏ ஆர் ரஹ்மானுக்கான துதியும் இல்லை, மற்ற இசையமைப்பாளர்களுக்கான சாடலும் இல்லை என ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
“ அவர் சொல்வதும் ஒரு விதத்தில் நியாயம் தான், அன்று இளையராஜாவும், ஏ ஆர் ரஹ்மானும் செய்த மேஜிக்கை இன்றைய இசையமைப்பாளர்களால் உருவாக்க முடியவில்லை என்பது நிச்சயம் ஒருமித்த கருத்து தான் “