உலகளாவிய அளவில் 1000 கோடி, ஹிந்தி எடிசனில் மட்டும் 500 கோடி, வசூலில் கலக்கும் ஜவான்!
Actor Sharukh Khan Jawan Reached 1000 Crores In WW 500 Crores In Hindi Edition Idamporul
நடிகர் ஷாருக்கானின் ஜவான் உலகளாவிய அளவில் ஆயிரம் கோடி வசூலையும், ஹிந்தி எடிசனில் மட்டும் 500 கோடி வசூலை ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் அட்லீ அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலகளாவிய அளவில் ஆயிரத்து நான்கு கோடி வசூலையும், ஹிந்தி எடிசனில் மட்டும் 500 கோடி வசூலையும் ஈட்டி இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
” அனைத்து மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை எல்லாம் உடைத்து நடிகர் ஷாருக்கான், தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் ஒரு முறை ஜவான் மூலம் நிரூபித்து இருக்கிறார் “