10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படம்!
Jayam Ravi 32th Film Update Idamporul
ஜெயம் ரவியின் 32 ஆவது திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின், ஐசாரி கணேஷ் அவர்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில், ஜெயம் ரவி அவர்களின் 32 ஆவது திரைப்படம் பான் இந்தியா படமாக 10 மொழிகளில் கிட்ட தட்ட 100 கோடி செலவில் எடுக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
“ அகிலன் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் கூட அடுத்தடுத்து ரிலீஸ் லிஸ்ட்டை ரெடியாக வைத்து இருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி “