ஜெயம் ரவி தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் ராஜேஷ் உடன் இணைகிறாரா?
Jayam Ravi Next Movie With Director M Rajesh
ஜெயம் ரவி தன்னுடைய அடுத்த படத்திற்காக இயக்குநர் ராஜேஷ் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய எம். ராஜேஷ் தனது அடுத்த படத்திற்காக ஜெயம் ரவியுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு இப்படம் ஒன்பதாவது தயாரிப்பு ஆகும். ஹாரிஸ், எம். ராஜேஷ் இருவரும் நிச்சயம் இந்த படத்தில் ஒரு கம்பேக் கொடுப்பார்கள் என்று நம்புவோம் “