NTR 30 திரைப்படத்தில் ஜூனியர் NTR-க்கு ஜோடியாகிறார் ஜான்வி கபூர்!
Jhanvi Kapoor in NTR 30 Idamporul
NTR 30 திரைப்படத்தில் ஜூனியர் NTR-க்கு ஜோடியாக ஜான்வி கபூர் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் கோரட்டலா சிவா அவர்களின் இயக்கத்தில், அனிருத் இசையில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் NTR 30 திரைப்படத்தில் வில்லனாக சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது படத்திற்கு கதாநாயகியாக ஜான்வி கபூர் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ ராஜ் மவுலி பாணியில் தெலுங்கில் ஒவ்வொருவரும் பிரம்மாண்டத்தை கையில் எடுக்கின்றனர். அதற்கு கதையும் முக்கியம் என்பதை மறந்து விடுகின்றனர். இந்த படம் எப்படி என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “