அடடே! பாடகி ஜோனிடா காந்தி ஹீரோயினா நடிக்க போறாங்களாம்!
Jonita Gandhi Becoming A Heroine For Rowdy Pictures Film
பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வினய்க் அவர்களின் இயக்கத்தில், உருவாகி வரும் ’வால்க்கிங் டால்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கீரிம்’ என்ற படத்திற்கு கிருஷ்ண குமார் அவர்கள் ஹீரோவாகவும், பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி ஹீரோயினாகவும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்களாம்.
“ ஒவ்வொரு லிரிக்கல் வீடியோவிலும் ஜோனிடா காந்தி தோன்றும் போதெல்லாம், இவங்களையே ஹீரோயினா போட்ருக்கலாம் என்று தோன்றிய ஒவ்வொரு ரசிகர்களுக்கும், சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து இருக்கிறார் ஜோனிடா ”