மிகவும் எதிர்பார்த்து வந்த ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் அறிவிப்பு வெளியானது!

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாய் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் 11.02.2022 அன்று வெளியாகும் என அறிவித்து இருக்கிறது படக்குழு. படம் ஏப்ரலில் வெளியாகும் எனவும் எதிர்பார்ப்புகளை முன் வைத்து இருக்கின்றனர்.

“ காதலர்களின் எதிர்பார்ப்புகளுக்கிணங்க ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் அப்டேட்டை கொடுத்து அவர்களின் தாகத்தை தீர்த்து இருக்கிறார் விக்னேஷ் சிவன் “

https://twitter.com/VigneshShivN/status/1488798642928373761

About Author