மீண்டும் மும்முரமாக நடிப்பில் களம் இறங்கி இருக்கிறார் காஜல் அகர்வால்!
Kajal Aggarwal Again In To Cini Idamporul
நடிகை காஜல் அகர்வால் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிப்பில் மும்முரமாக களம் இறங்கி இருக்கிறார்.
திருமணம், குழந்தை என்று சினிமாவிற்கு நீண்ட இடைவெளிவிட்டு இருந்தார் நடிகை காஜல் அகர்வால். வாய்ப்புகள் தொடர்ந்து அவரை வந்து நாடிக் கொண்டே இருப்பதால் தெலுங்கில் பாலகிருஷ்ணா அவர்களின் 108 ஆவது படத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறாராம். வெகுவிரைவில் கோலிவுட்டிலும் பல பிராஜக்டுகளில் களம் காணுவாராம்.
“ தற்போது இந்தியன் 2 படத்திலும் நடிகை காஜல் அகர்வால் பிஸி சூட்டிங்கில் இருப்பதாக தெரிகிறது “