72 வயதிலும் அவரைப் போல் உழைத்து விட்டு சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுங்கள் – கலாநிதிமாறன்
Kalanithi Maaran Speech About Rajinikanth At Jailer Audio Launch Idamporul
72 வயதிலும் அவரைப் போல உழைத்து விட்டு சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுங்கள் என கலாநிதிமாறன் நடிகர் ரஜினிகாந்த் குறித்து கூறி இருப்பது வைரலாகி வருகிறது.
இப்போது அவருக்கு வயது 72, இன்றும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவரின் வீட்டின் வாசலில் தவம் கிடக்கின்றனர். காரணம் அவர் அந்த இடத்திற்கு வர அவர் போட்ட உழைப்பு அதிகம். சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுங்கள், ஆனால் 72 வயதிலும் அவரைப் போல உங்களால் உழைக்க முடியும் என்றால் ஆசைப்படுங்கள் என கலாநிதிமாறன் கூறி இருக்கிறார்.
“ சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்திற்கு என்ன தான் கோலிவுட்டில் பலரும் போட்டி போட்டாலும் கூட, நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மட்டுமே அந்த டைட்டில் எல்லா விதத்திலும் பொருந்தும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “