இயக்குநர் ஷங்கருக்கு 8 இலட்ச ரூபாய் வாட்சை பரிசளித்த கமல் ஹாசன்!
Kamal Hassan Gifted Costly Watch To Indian 2 Director Shankar Idamporul
இந்தியன் 2 படத்தை பாராட்டும் விதமாக அதன் இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 8 இலட்ச ரூபாய் மதிப்பு மிக்க வாட்சை பரிசளித்து இருக்கிறார் அப்படத்தின் நடிகர் கமல்ஹாசன்.
இந்தியன் 2 திரைப்படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், படத்தின் ஒரு சில பகுதிகளை காட்சியமைப்பாக பார்த்து ரசித்த அப்படத்தின் நடிகர் கமல்ஹாசன் அவர்கள், இயக்குநர் ஷங்கர் அவர்களை பாராட்டும் விதமாக கிட்ட தட்ட எட்டு இலட்ச ரூபாய் மதிப்பு மிக்க வாட்ச் ஒன்றை பரிசளித்து இருக்கிறார்.
“ படத்தை கமல்ஹாசன் அவர்களே வியந்து பாராட்டி இருக்கிறார் என்றால் நிச்சயம் இந்தியன் 2 திரைப்படத்தில் ஷங்கர் மேஜிக் செய்து இருப்பார், எப்படியோ பழைய ஷங்கரை பார்த்தால் போதும் “