இரண்டே நாட்களில் 100 கோடியைக் கடந்தது விக்ரம்!
Vikram WW Collection Reached 100 Crores
உலகநாயகன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி இருந்த விக்ரம் உலகளாவிய அளவில் 100 கோடிக்கும் மேலான வசூலை அள்ளி இருக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் இணைவில் உருவாகி வெளியாகி இருந்த விக்ரம் பெருவாரியாக நேர்மறை விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், இரண்டே நாட்களில் உலகளாவிய அளவில் 100 கோடிக்கும் மேலாக வசூலித்து இருக்கிறது. நேர்மறை விமர்சனங்களால் 90 முதல் 95 சதவிகித தியேட்டர்களையும் ஆக்கிரமித்து வருகிறது விக்ரம்.
“ நடிகர் கமல் ஹாசன் அவர்களுக்கு விக்ரம் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய ஓப்பனிங்கை கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது “