ராஜ்மவுலியின் ‘மஹதீரா’ திரைப்படத்தின் உல்டா தான் ‘கங்குவா’ திரைப்படமா?

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம், ராஜ்மவுலியின் ‘மஹதீரா’ திரைப்படத்தின் உல்டா என்று கூறப்பட்டு வருகிறது.

ஒரு எளிய மனிதனின் நிகழ்காலத்தையும், ஒரு அரசனின் கடந்தகாலத்தையும் இணைக்கும் படம் தான் ராஜ்மவுலியின் மஹதீரா. அதே போல தான் ‘கங்குவா’ திரைப்படமும் ஒரு அரசனின் கடந்த காலத்தையும், ஒரு எளிய மனிதனின் நிகழ்காலத்தையும் இணைக்கும் கதை என்று கூறப்பட்டு வருகிறது.

கிட்ட தட்ட சேம் ஒன்லைன் தான், சரி அப்படியே இருந்து விட்டு போகிறது. இயக்குநர் சிவா திரைக்கதையில் ஏதேனும் வித்தியாசம் காட்டி இருந்தால் ஓகே. இல்லையென்றால் ஒரே நாளில் பான் இந்தியா படம் என்றும் பாராமல் இணையவாசிகள் படத்தை வச்சி செய்ய ஆரம்பித்து விடுவர்.

“ தற்போதெல்லாம் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதே இணையவாசிகள் தான், கொஞ்சம் மிஸ் ஆனாலும் பான் இந்தியா படத்திற்கு கூட பாடை கட்டி விடுவார்கள் “

About Author