கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம்!
Kannada Super Star Puneeth Rajkumar Dies Of Heart Attack
கன்னடத்தின் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் புனீத் ராஜ்குமார் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது கன்னட திரைப்பட உலகத்தையே அதிர வைத்திருக்கிறது.
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக அறியப்படும் புனீத் ராஜ்குமார் இன்று காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பெங்களூவில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையான விக்ரம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கன்னட சினிமாவின் பிட்டஸ்ட் நடிகராக அறியப்படும் புனீத் ராஜ்குமார் 46 வயதில் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது, கன்னட திரைப்பட உலகையே அதிர வைத்திருக்கிறது. சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு நேரிலும் இணையத்திலும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தும் அறிவித்தும் வருகின்றனர்.
“ நாளை என்பதை இங்கு யாரும் சொந்தமாக்கி கொள்ள முடியாது. இன்று இந்த நிமிடம் வாழும் வாழ்க்கை தனை போற்றி வாழ்ந்திடுவோம் “