தன் மகனுக்கு ‘சாதியில்லா சான்றிதழ்’ வாங்கிய கயல் ஆனந்தி!
Actress Anandhi in Titanic: Kadhalum Kavunthu Pogum Movie Images
சமூக வேறுபாடுகளை களையும் நோக்கில், தன் மகனுக்கு ‘சாதியில்லா சான்றிதழ்’ வாங்கி இருக்கிறார் கயல் ஆனந்தி.
கயல், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த கயல் ஆனந்தி, 2021 ஆம் ஆண்டு சாக்ரடீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில் தன் குழந்தைக்கு ‘சாதியில்லா சான்றிதழ்’ வாங்கி சமூகத்தில் புது புரட்சி ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்.
“ பெரும்பாலும் இங்கு வேறுபாடுகள் சாதி, மதங்களை வைத்தே நிகழ்த்தப்படுவதால் அதை கருத்தில் கொண்டு இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பதாக கயல் ஆனந்தி கூறி இருக்கிறார், அவருடைய இந்த செயலுக்கு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர் “