சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கும் கீர்த்தி சுரேஷ்!
Keerthy Suresh In Sudha Kongara Direction
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் முழுக்க முழுக்க ஹீரோயின்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சூர்யா- சுதா கொங்கரா இயக்கத்தில் தான் சூர்யாவின் அடுத்த படம் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், சூர்யா வாடி வாசல், வணங்கான், இயக்குநர் சிவாவின் படம் என்று பிஸியாக இருப்பதால், சுதா கொங்கரா கீர்த்தி சுரேஷ் அவர்களை வைத்து முழுக்க முழுக்க ஹீரோயின்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ சூரரைப்போற்று படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படம் என்பதால் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது “