’பீஸ்ட் ட்ரெயிலர்’ பார்த்து விட்டு பக்கா மாஸ் என்று கூறிய கே.ஜி.எப் இயக்குநர் பிரசாந்த் நீல்!
KGF 2 Director Prashanth Neel Tweet About Beast Trailer
பீஸ்ட் ட்ரெயிலரை பார்த்து விட்டு, ‘ட்ரெயிலர் பக்கா மாஸ்’ என்று கூறி இருக்கிறார் கே.ஜி.எப் இயக்குநர் பிரசாந்த் நீல்.
கே.ஜி.எப் 2 மற்றும் பீஸ்ட் இரண்டும் ஒன்றாக களத்தில் இறங்குவதால் நிச்சயம் இரு படக்குழுவினருக்கும் ஒரு விதமான போட்டி சூழல் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு பக்கம் யாஷ், நானும் பீஸ்ட் பார்ப்பேன் என்கிறார். இன்னொரு பக்கம் கே.ஜி.எப் இயக்குநர் ட்ரெயிலரை பக்கா மாஸ் என்கிறார்.
” ஆக மொத்தம் ’இது ஒரு போட்டி சூழலும் அல்ல போட்டியிட மல்யுத்தமும் அல்ல, இது சினிமா’ என்பதை ரசிகர்களாகிய நமக்கு உணர்த்தி இருக்கின்றனர் படக்குழுவினர் “