’பீஸ்ட்’ திரைப்படத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறதா ‘கே.ஜி.எப் 2’?

KGF 2 Warn Beast Team By Too Fan Lyrical Video

KGF 2 Warn Beast Team By Too Fan Lyrical Video

கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ’Too Fan’ லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கும் நிலையில் அதில் இடம் பெற்று இருக்கும் வரிகள் பீஸ்ட்-க்கு எச்சரிக்கை விடுப்பது போல அமைந்து இருக்கிறது.

பீஸ்ட் மற்றும் கே.ஜி.எப் 2 இரண்டும் ஒன்றாக களத்தில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இன்று கே.ஜி.எப் 2 குழு ‘Too Fan’ லிரிக்கல் வீடியோ மூலம் பீஸ்ட் குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ’உங்களுக்கு ஒரு யோசன சொல்றேன் நீங்க மட்டும் அவன் குறுக்க போயிடாதீங்க சார்’ என்பதே அந்த வரி.

“ சமீப காலமாக ட்ரெயிலர் மற்றும் டீசரில் எதிர் எதிர் நடிகர்கள் இது போல எச்சரிக்கை வசனங்கள் வைப்பது வாடிக்கையாகி வருகிறது. ஏற்கனவே பேட்ட, விஸ்வாசம் திரைப்படத்தில் இது போன்ற எச்சரிக்கை வசனம் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது “

About Author