’படம் நல்லா போகட்டும், அப்புறமாக முழு சம்பளத்தையும் வாங்கி கொள்கிறேன்’ – நடிகர் யாஷ்
KGF 2 Sulthana Tamil Lyrical Song Is Out
நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் யாஷ் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நடிகர் யாஷ் மற்றும் பிரஷாந்த் நீல் இணைவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் தான் கே.ஜி.எப் 2. நடிகர் யாஷ் அவர்கள் இன்னமும் இந்த படத்திற்கான முழுச்சம்பளத்தையும் வாங்கவில்லையாம், படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெறட்டும் அப்புறமாக வாங்கி கொள்கிறேன் என்று கூறி இருக்கிறாராம் யாஷ்.
“ படத்திற்கு 100 கோடி வேண்டும் 150 கோடி வேண்டும் என்று அடித்து கேட்டு, தற்புகழ் பேசியே ஓட்டும் எத்தனையோ நடிகர்களுக்கு மத்தியில், சினிமாவிற்காக உழைக்கும் யாஷ் போன்ற நடிகர்களும் இருக்க தான் செய்கிறார்கள் “