கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ‘Too Fan’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு!
KGF Chapter 2 TOO FAN Lyrical Video Date Is Out
நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ‘Too Fan’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் உலகளாவிய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த நிலையில், வருகின்ற ஏப்ரல் 14-யில் அதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. தற்போது நாளை (21-03-22) காலை 11:07 மணிக்கு ‘Too Fan’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
” நிச்சயம் அடித்து சொல்லலாம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்த கே.ஜி.எப் 2. முழுக்க முழுக்க மாஸ் மற்றும் மசாலாக்கள் இருந்தாலும் நேர்த்தி நடிப்பு, கதை என்று கே.ஜி.எப் முதல் பாகம் யாவினிலும் ஹிட். அது போல இரண்டாம் பாகமும் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கை “