துவங்கியது கே.ஜி.எப் 3 படத்திற்கான பணிகள், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

KGF 3 Works Starts Soon

KGF 3 Works Starts Soon

கே.ஜி.எப் 3 படத்திற்கான பணிகள் துவங்கி இருப்பதாகவும் வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் யாஷ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் இணைவில் தற்போது வெளியாகி இருந்த கே.ஜி.எப் 2 உலகளாவிய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கும் நிலையில் படத்தின் நிறைவில் கே.ஜி.எப் 3 குறித்த தகவல் வெளியிடப்பட்டு இருக்கும். இந்த நிலையில் படத்தில் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா கே.ஜி.எப் 3 படத்திற்கான பணிகள் துவங்கி விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

“ இன்னமும் கே.ஜி.எப் 2 திரைப்படத்தில் இருந்தே மீளாத கே.ஜி.எப் ரசிகர்களுக்கு, இந்த கே.ஜி.எப் 3 அறிவிப்பு குதூகலத்தை ஏற்படுத்தி இருக்கிறது “

About Author