மலையாளத்தில் வெளிவந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கை KS ரவிக்குமார் தயாரித்து நடிக்க, அவரின் உதவி இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார்கள்.
இந்தப் படத்தில் பிக் பாஸ் சீசன் 3இல் வந்த தர்ஷன் லாஸ்லியா ஜோடியாக நடிக்கிறார்கள். டீஸரிலும் இவர்கள் நெருக்கமாக இருக்கும் சில காட்சிகள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் பார்த்தவர்களுக்கு இவர்களை அண்ணன் தங்கை போல் பழகியது தான் தெரியும் என்பதால், இது வித்தியாசமாக இருக்கிறது, அதிர்ச்சி அளிக்கிறது என சில ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நடிப்பென வரும் பொழுது நிஜ வாழ்க்கை வேறு, நடிப்பு வேறு என்பதே உண்மை. இந்த படத்தின் டீசரை பார்க்கும் பொழுது இது ஒரு நல்ல மகிழ்ச்சி அளிக்கக் கூடிய குடும்பப் படமாக இருக்கும் என்பது தெரிகிறது. யோகி பாபு, ராகுல் இன்னும் பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். படக்குழுவுக்கு இடம் பொருள் சார்பாக வாழ்த்துக்கள்.