Leo Trailer Review | ‘ஒரு பக்கா மாஸ் கமெர்சியல் சமையல் போல தான் தெரிகிறது’
Leo Official Trailer Review In Tamil Idamporul
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் இணையும் ‘லியோ’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இது வரை லோகேஷ் என்ன சமைத்துக் கொண்டு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த நிலையில் ட்ரெயிலர் வெளியானதும், சற்று கொஞ்சமாக படம் குறித்த புரிதல் உருவாகி இருக்கிறது. படத்தில் இரண்டு விஜய், ஒருவர் லியோ, இன்னொருவர் காஷ்மீரில் வசித்து வரும் சாதாரண மனிதன். லியோ என நினைத்து ஒரு கும்பல் காஷ்மீரில் வசிக்கும் விஜய்யை துரத்துகிறது. லியோவிற்கு என்ன ஆனது. திரும்பி வருவாரா என்பது தான் மீதி கதையாக இருக்கும் என புரிகிறது.
ட்ரெயிலர் முழுக்க மாஸ் எலிமெண்டுகள் தான் இருக்கிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு அருமை. நிச்சயம் அனிருத் படத்திற்கு தூணாக நிற்பார் என்பது ட்ரெயிலரிலேயே தெரிகிறது. அன்பறிவின் ஸ்டண்டுகள் அருமை. பக்கா சமையல் தான். ஆனால் படம் வெளிவந்த பின்பு தான் அது பிரியாணியா, புளியோதரையா என்பது தெரியும்.
“ படத்தின் கதை ஓரளவுக்கு ட்ரெயிலரிலேயே புரிவதால் திரைக்கதையில் லோகேஷ் என்ன என்ன வித்தியாசம் காட்டி இருக்கிறார் என்பதை பொறுத்து தான் படத்தின் வலிமை “