’லிப்ட்’ திரைப்படத்தின் ‘ஹே ப்ரோ’ வீடியோ சாங் இணையத்தில் வெளியாகி உள்ளது!
Lift Movie Hey Bro Video Song Is Out Now
பிக்பாஸ் பிரபலம் கவின் நடித்து வெளியான ‘லிப்ட்’ திரைப்படத்தின் ‘ஹே ப்ரோ’ வீடியோ சாங் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஹெப்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வினித் வரபிரசாத் அவர்களின் இயக்கத்தில், ’பிக்பாஸ்’ கவின், அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம் அக்டோபர் 1 அன்று வெளியாகி இருந்த நிலையில், அந்த படத்தின் ‘ஹே ப்ரோ’ வீடியோ சாங் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
” பிரிட்டோ மைக்கேல் இசையமைப்பில், கிருத்திகா நெல்சன், அதீப் முகமது, பென் கிங்ஸ்லி பாடியுள்ள இந்த பாடல், ஒரு மாதிரியான செம பீலை தருகிறது. இனி பல படங்களில் பிரிட்டோவின் இசையை கேட்கலாம் “