’விக்ரம்’ கதைக்கு முழுமையாக காப்புரிமை வாங்கிய லோகேஷ் கனகராஜ்!
Lokesh Kanagaraj Stills
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக காப்புரிமை வாங்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
’என் கதையை திருடி விட்டார்’ என்று வழக்கு போடுவது, சினிமா உலகில் தற்போது சாதாரணமாகி விட்டது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் முன் எச்சரிக்கையாக தனது விக்ரம் படத்தின், கதை, திரைக்கதை, வசனம் அடங்கிய மொத்த ஸ்க்ரிப்டிற்கும் இந்திய காப்புரிமைச்சட்டத்தின் கீழ் காப்புரிமை வாங்கி வைத்து விட்டார்.
“ உஷார் தான் லோகேஷ், துவண்டு கிடக்கும் தமிழ் சினிமாவிற்கு விக்ரம் திரைப்படம் ஆவது புத்துணர்ச்சியை தருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “