’லியோ’ அவுட்புட்டால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிருப்தி?
நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தின் அவுட்புட்டால் லோகேஷ் கனகராஜ் அதிருப்தி அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான லியோ திரைப்படத்தில், விஜய் அவர்களின் காட்சிகள் சில நாட்களுக்கு முன் தான் படமெடுத்து முடிக்கப்பட்டது. இந்த நிலையில் அதன் அவுட்புட்டை பார்த்த லோகேஷ் அவர்களுக்கு சற்றே அதிருப்தியாம். நிறைய காட்சிகளில் விஜய் அவர்களின் தலையீடு இருந்ததால் லோகேஷ் நினைத்தது போல காட்சியமைக்க முடியவில்லை என கூறப்பட்டு வருகிறது.
“ மிகப்பெரும் நடிகரான கமல்ஹாசன் அவர்களே ஒரு இளம் இயக்குநருக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுக்கும் போது மற்ற நடிகர்களும் அதை கற்றுக் கொண்டால் ஒரு படத்தை அந்த இளம் இயக்குநர் அவருக்கு ஏற்றார் போல எடுத்து அவரின் திறமையை நிரூபிப்பார் “