‘லியோ’விற்காக உழைத்தவர்களுக்கு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த லோகேஷ்!
’லியோ’ திரைப்படத்திற்காக பின்னிருந்து உழைத்த ஒவ்வொருவருக்கும் வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்தார் லோகேஷ் கனகராஜ்.
’லியோ’ திரைப்படத்தின் காஷ்மீர் காட்சிகள் முழுமையாக முழுமையடைந்ததை அடுத்து, அங்கு நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தன்னுடன் பின்னிருந்து கடுமையாக உழைத்த ஒவ்வொருவருக்கும் ஒரு 7 நிமிட வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்து இருக்கிறார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
“ படம் என்பது எளிதாக எடுக்க கூடிய காரியம் அல்ல, அதிலும் பின் இருந்து உழைப்பவர்கள் யார் கண்ணுக்கும் தெரிவதும் இல்லை, அவர்களுக்காக வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு முதலில் நன்றி “