உலகளாவிய அளவில் வசூலை அள்ளிக் குவிக்கும் மலையாள திரைப்படங்கள்!
Two Low Budget Malayalam Films Hitting Hundred Crores In Box Office Idamporul
உலகளாவிய அளவில் ஒரே நேரத்தில் இரண்டு மலையாள படங்கள் 100 கோடி வசூலை கடந்து இருக்கிறது.
இயக்குநர் க்ரிஷ் அவர்களின் இயக்கத்தில், நஸ்லேன், மமிதா பைஜு இணைந்து நடித்து வெளியாகி இருக்கும் ’பிரேமலு’ திரைப்படம் உலகளாவிய அளவில் 100 கோடி வசூலை எட்டி இருக்கிறது. இயக்குநர் சிதம்பரம் அவர்களின் இயக்கத்தில் பெரிய ஸ்டார்கள் ஏதும் இல்லாமல் வெளியாகி உலகளாவிய அளவில் ஹிட் அடித்து வரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ 160 கோடி வசூலை எட்டி இருக்கிறது.
100 கோடி வசூலை கடந்து சென்று கொண்டு இருக்கும் பிரேமலு திரைப்படத்தின் ஒட்டு மொத்த பட்ஜெட்டே 3 கோடி தான் என கூறப்படுகிறது. 160 கோடி வசூலை கடந்து சென்று கொண்டு இருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் ஒட்டு மொத்த பட்ஜெட்டே 20 கோடி தான் என கூறப்படுகிறது.
“ குறைந்த பட்ஜெட், நிறைவான ஒரு படம், அதீத இலாபம் என்று மலையாள சினிமாக்கள் இந்திய சினிமாவில் ஒரு புதிய ட்ரெண்டை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம் “