லோகேஷ் போல சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை துவங்குகிறாரா மாரி செல்வராஜ்!

லோகேஷ் கனகராஜ் போல இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களும் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் அவர்கள் விக்ரம் திரைப்படத்தின் மூலம் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை அறிமுகப்படுத்திய நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் மூலம் மாரிசெல்வராஜ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.

அவர் இதற்கு முன்னர் எடுத்த திரைப்படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களின் தொடர்ச்சியாக மாமன்னன் இருக்கலாம் என சினிமா விமர்சகர்கள் கணித்து வருகின்றனர். இந்த தகவல் பெருமளவில் பேசப்பட்ட போதும் படக்குழு மறுப்பு தெரிவிக்காததால் இது உண்மையாக இருக்கலாம் என்றே கூறப்பட்டு வருகிறது.

“ மார்வல் திரைப்படங்களை போல தமிழ் சினிமாவில் எழுந்து இருக்கும் சினிமேட்டிக் யுனிவர்ஸை ரசிகர்கள் தொடர்ந்து ரசிப்பார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “

About Author