’மாநாடு’ உண்மையான கலெக்சன் தான் என்ன? எதற்காக தான் அந்த 100 கோடி வதந்தி?
Maanaadu Team Spreads Fake Collection Report
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் ஒருவர் ’மாநாடு’ கலெக்சன் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் மாநாடு திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். ஆனால் படமோ 80 கோடி அளவில் தான் வசூல் செய்ததாகவும் சிம்பு அவர்கள் தரப்பில் இருந்து ’100 கோடி என்று சொல்லுங்கள்’ என்று அழுத்தம் தரப்பட்டதாகவும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
எதற்காக இந்த வசூல் ஹைப் என்று தெரியவில்லை, ரசிகர்கள் ஒரு பக்கம் வசூல் வசூல் என்று சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் போது, அதன் உண்மை தன்மை எல்லாம் இப்படி தான் இருக்குமோ, தங்கள் நடிகர் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள வசூல் என்னும் மாயையை பயன்படுத்துகிறார்களோ என்னும் சந்தேகம் எழத்தான் செய்கிறது.
“ இனியாவது ரசிகர்கள் இந்த மாயையை புரிந்து கொண்டு வசூல் வசூல் என்று சமூக வலைதளங்களில் பிதற்றிக்கொள்ளாமல், படத்தை படமாக பார்த்து விட்டு அதில் இருந்து வெளிவர வேண்டும் “