’மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு!
Maaran Polladha Ulagam Video Song Releasing Date Announced
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடித்து இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழு பாடலின் வீடியோ வடிவம் நாளை மாலை 7 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
” பெருகி வரும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் கூட தற்போது வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தனுஷ்சின் மாறன் திரைப்படமும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது “