’மாறன்’ திரைப்படக்குழுவிடம் இருந்து போஸ்டருடன் வந்த காதலர் தின வாழ்த்துக்கள்!
Pair Of Maaran Dhanush And Malavika Sending Valentine Wishes To Fans By Poster
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் படக்குழுவினர் போஸ்டருடன் காதலர் தின வாழ்த்தினை தெரிவித்து இருக்கின்றனர்.
கார்த்தின் நரேன் இயக்கத்தில், தனுஷ், மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் ’மாறன்’ திரைப்படம் வலை தளத்தில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து இருக்கும் ஒரு போஸ்டரை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்களை கூறி இருக்கிறது படக்குழு.
“ தீடீரென்று அறிவிப்பு, போஸ்டர்கள் வந்தாலே ரசிகர்கள் குஷி ஆகி விடுவார்கள். அந்த வகையில் இன்றைய ட்ரெண்டிங் இந்த போஸ்டரும் மாளவிகா மோகனனும் தான் “