மலையாள இளம் இயக்குநர் 31 வயதில் மரணம்!
மலையாள இளம் இயக்குநர் 31 வயதில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்து இருப்பது மலையாள சினிமா உலகை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.
மலையாள இளம் இயக்குநர் ஜோசப் மனு ஜேம்ஸ் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை மிக மோசமாகி 31 வயதில் மரணம் அடைந்து இருக்கிறார். ’நான்சி ராணி’ என்ற அவரது படம் போஸ்ட் புரொடக்சன் நிலையில் இருந்த போது அவரின் இழப்பு படக்குழுவை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.
“ சரியான உணவுப்பழக்கத்தை கடைப்பிடித்தால் இது போன்ற இளம் இறப்புகளை தவிர்க்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “