மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!
Mirchi Shiva In Idiot Movie Releasing Date Announced
மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’ திரைப்பம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்கிரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், ராம் பாலா அவர்களின் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, நிக்கி கேல் ராணி, அக்ஷாரா கவுடா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 1 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ ஒரு காமெடி பேய் படம் போல, வெளியான ட்ரெயிலரியே பேயை வைத்து செய்து இருக்கிறார் மிர்ச்சி சிவா. நிச்சயம் சிரிப்பலைகளை இந்த திரைப்படம் அள்ளும் “