சோழர்களின் வரலாற்றை மையமாக வைத்து படம் எடுக்க ஆசை – மோகன் ஜி
Mohan G Wants To Direct Movie About Chozha History Idamporul
சோழர்களின் வரலாற்றை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க ஆசை இருப்பதாக இயக்குநர் மோகன் ஜி அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
பழைய வண்ணார்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி அடுத்த கட்டமாக சோழ வம்சத்தின் வரலாறுகளை மையமாக வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக கருத்து தெரிவித்து இருக்கிறார். சூழல் அமையும் பட்சத்தில் சாத்தியமாகும் என கருத்து தெரிவித்து இருக்கிறார்.
“ சமீப காலமாக அரசர்களின் வரலாறுகளை படமாக இயக்குவது இயக்குநர்களிடையே ட்ரெண்ட் ஆகி வருகிறது. மோகன் ஜி அவர்களும் அந்த ட்ரெண்டை கையில் எடுத்து இருக்கிறார், பொறுத்து இருந்து பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று “