2022-யில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து ஏமாந்த ஐந்து படங்கள்!
2022 முடியும் கட்டத்தில் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்த்து சொதப்பிய ஐந்து படங்களை இங்கு பார்க்கலாம்.
5) கோப்ரா – விக்ரம் – அஜய் ஞானமுத்து
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் என்று பெரிய ஹிட்டை கொடுத்த அஜய் ஞானமுத்து அவர்களிடம் ரசிகர்கள் எதிர்பார்த்த அவுட்புட் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
4) நானே வருவேன் – தனுஷ் – செல்வராகவன்
தனுஷ் – செல்வராகவன் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்த்த படம், ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் போய் சேரவில்லை.
3) எதற்கும் துணிந்தவன் – சூர்யா – பாண்டி ராஜ்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, தியேட்டர் ரிலீஸ் என்றதும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருந்தது. ஒரு பேமிலி எண்டர்டெயினருக்குள் சமூக கதைகளை சொருவி எந்த ரகம் என்று தெரியாமலே இந்த படம் போய்விட்டது.
2) பீஸ்ட் – விஜய் – நெல்சன்
விஜய் – நெல்சன் கூட்டணியில் மிக மிக எதிர்பார்க்கப்பட்ட படம். படம் முழுக்க மேஜிக் சீன்கள் இருந்தாலும், லாஜிக் சொதப்பல்களால் மிகவும் கலாய்க்கப்பட்ட படமாக மாறி விட்டது.
1) வலிமை – அஜித் – ஹெச் வினோத்
ஒரு வலுவான ஸ்டோரி லைன் இருந்தாலும் கூட, அதற்குள் பேமிலி சென்டிமெண்டை தேவையில்லாமல் கொண்டு வந்து படத்தையே வலிமையிழக்க வைத்து இருந்தார் ஹெச். வினோத். ஒரு ராவான வில்லனிசத்தை படம் முழுக்க காட்டி இருந்திருந்தால் பெஸ்ட் திரைப்படமாக இருந்திருக்கும்.
“ பெரிய ஹீரோக்களின் படம் 2022-யில் பெரிதாக அடி வாங்கி இருந்தது. ரசிகர்கள் தற்போதெல்லாம் மாஸ் மசாலாவை விரும்புவதை காட்டிலும் கதைக் களத்தை எதிர்பார்க்கின்றனர். சிறிய சிறிய ஹீரோக்கள் புதுமுக இயக்குநர்கள் 2022 களத்தில் அதிகமாக ஜெயித்து இருக்கின்றனர் “