20 வயதில் நானூற்றுக்கும் மேற்பட்ட மேடை, வில்லிசையில் கலக்கும் மாதவி!
20 வயதே ஆகும் வில்லிசை மாதவி, கிட்ட தட்ட நானூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் வில்லிசை பாடி ஒரு புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார்.
பொதுவாக வில்லிசை என்பது திருவிழா மேடைக்களில் அந்தந்த குல சாமிக்கள் பற்றி பாடப்படும் ஒரு பாடல் தொகுப்பு. இது ஒரு வாய் மொழி இலக்கியமும், வரலாற்றும் கலந்ததாக அமையும், இரண்டாயிரத்திற்கு பின்னர் பாடல், கச்சேரி என திருவிழாக்கள் அதன் பின்னால் போக ஆரம்பித்ததால் வில்லிசை சற்றே மழுங்க ஆரம்பித்தது.
அப்போது தான் ஒரு 18 வயது சிறுமி திருவிழாக்களில் அட்டகாசமாக வில்லிசை பாடுவதை ஒரு கூட்டம் சுற்றும் முற்றும் கூடி பார்க்க ஆரம்பித்தனர். ஒரு சிலர் அதை வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவிடவே சற்றே பிரபலமாகிறார். அவர் யார் என்று கேட்டால் அவர் தான் வில்லிசை மாதவி, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சிமன்றம் அச்சங்குட்டம் என்ற ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர்.
மிகவும் எளிய குடும்பம் தான், வில்லிசைக்கான பின்புலம் இல்லாதவர், ஆனாலும் வில்லிசை மீது இருந்த ஆர்வத்தால் அதை குரு வைத்து கற்றுக் கொண்டு மேடை அரங்கேற்றம் செய்து வருகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் பலரும் கேலி செய்த போதும் கூட அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து மேடை ஏறி இருக்கிறார் மாதவி.
தொடர்ந்து இவரது பாட்டு எளிய ஜன மக்களுக்கு பிடித்து போகவே, தற்போது தமிழகமெங்கும் வில்லிசை கச்சேரி நடத்தி வருகிறார். இணையங்களில் வில்லிசை மாதவியாக அறியப்படுகிறார். கனீர் என்ற குரலும், மெல்லிய புன்னகையும், அர்த்தமுள்ள பாடல் வரிகளும் மாதவிக்கான் அடையாளங்கள்.
“ கிட்டதட்ட ஆல்மோஸ்ட் அழிந்து போன வில்லிசைக்கு மீண்டும் மாதவி உயிர் கொடுத்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடல் பாடல்களை நீக்கி விட்டு அனைத்து திருவிழாக்களிலும் வில்லிசை புக் செய்யும் அளவிற்கு வில்லிசையை மாதவி வளர்த்து இருக்கிறார் என்றால் மிகையாகாது “