’டாக்டர்’ படத்தின் ‘செல்லம்மா’ பாடல் வீடியோ வடிவம் வெளியாகும் தேதி அறிவிப்பு!
Doctor Movie Chellamma Video Song Releasing Date Announced
’டாக்டர்’ திரைப்படத்தின் ‘செல்லம்மா’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படத்தில் பெரிதும் ஹிட்டான ‘செல்லம்மா’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் நாளை (21-10-21) காலை 11:03 அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.
“ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ’செல்லம்மா’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாக இருக்கிறது கொண்டாடுவோம் “