கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு திகட்டல் அடிக்கும் அனிருத் அவர்களின் இசை!
Anirudh Ravichander Downfall Is Started Says Fans Fact Here Idamporul
இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் இசை, இசை ரசிகர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திகட்டல் அடித்து வருகிறது.
தற்போது வெளியான ஜெயிலர் ஆல்பங்களும் சரி, ஜவான் முதல் சிங்கிளும் சரி பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. என்ன தான் பாடலின் பார்வைகள் மில்லியன் கணக்கிலும், ரீல்ஸ்களில் பாடல்கள் ட்ரெண்டிங்கில் இருந்தாலும் கூட தற்போதெல்லாம் அனிருத் அவர்களின் இசை திகட்டல் அடிப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னெல்லாம் ஒரு இசை யுகங்கள் கடந்தும் கூட ரசிக்கப்படும், ஆனால் தற்போதெல்லாம் ஒரு நான்கைந்து தடவை கேட்டால் சலித்து விடுகிறது பாடல்கள். இசை ரசிக்கப்பட வேண்டுமானால் வரிகள் நன்றாக அமைய வேண்டும். வரிகள் ரசிக்கப்பட வேண்டுமானால், இசைகள் நன்றாக அமைய வேண்டும்.
“ ஆனால் தற்போதெல்லாம் ரீல்ஸ்களுக்கு ஏற்றார்போல பீட்களை, வரிகளை மாஸ்சாக செய்து விட்டு அதன் மூலம் பாடல்களை பிரபலப்படுத்தி விடுகின்றனர். அந்த நிமிட ட்ரெண்டிங் போல அந்த பாடலும் சில நாட்களில் சலித்து போகும் அவ்வளவு தான் “