வெளியானது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள்!
Jailer Second Single Hukum Is Out Idamporul
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைவில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் அனிருத் அவர்களே பாடி இருக்கும் ஹுகும் என்ற அந்த பாடல் தான் இன்று அனைத்து வலைதளங்களிலும் ட்ரெண்ட்.
” கடைசியாக ரஜினிகாந்த் அவர்களை கார்த்திக் சுப்புராஜ் பேட்ட திரைப்படத்தில் பழைய பார்முக்கு கொண்டு வந்திருந்தார். தற்போது ஜெயிலர் பிரேம்களை பார்க்கும் போது நெல்சனும் அதை செய்வார் என தோன்றுகிறது “