நதியின் அடியில் இருக்கும் சிறு கூழாங்கல், ஓடும் நதிக்கு எப்போதுமே இடையூறாக அமைவதில்லை!
நதிகளின் அடியில் இருக்கும் சிறு கூழாங்கல் பாரம் அதிகம் தான் என்றாலும் கூட, ஓடுகின்ற நதிகளுக்கு அது எப்போதுமே இடையூறாக அமைவதில்லை.
இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014-யில் வெளியான ’பிசாசு’ என்ற திரைப்படத்தில் ‘போகும் பாதை தூரமில்லை’ என்ற ஒரு பாடல் இருக்கும். அர்ரோல் கோரெல்லி அவர்களின் இசையில், தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் எழுத்தில், உத்ரா உன்னி கிருஷ்ணன் என்ற மழலை பாடும் பாடல் அது. அந்த பாடலில் ஒரு வரிகள் வரும்.
” நதி போகும் கூழாங்கல், பயணம் தடையமில்லை,
வலி தாங்கும் சுமை தாங்கி மண்ணில் பாரமில்லை,
ஒவ்வொரு அலையின் பின், இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே….”
இந்த வாழ்க்கை என்பதே பொதுவாக வலிகள் நிறைந்தது தான், அந்த வலிகள் எவ்வளவு பாரமாக இருந்தாலும் கூட, அது நதிகளின் அடியில் இருக்கும் கூழாங்கல்லாக தான் இருக்க வேண்டும். நாம் அந்த கூழாங்கல்லை தடையாக பார்க்காமல் பயணித்துக் கொண்டே இருக்கின்ற அந்த நதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு அலைக்கு பின்னாலும் ஒரு மிகப்பெரிய சமுத்திரம் இருக்கிறது. நம் கண்ணீர் துளிகள் இனிக்கட்டும்.
“ ஒரு நான்கு வரி தான், ஆனால் இந்த வரிகளை கேட்கும் போதெல்லாம் வாழ்வின் ஒட்டு மொத்த வலிக்கும் ஏதோ ஆறுதல் கிடைத்தது போல இருக்கும், இப்படிப்பட்ட ஆற்றுதல்களை வரிகளாக கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு நன்றிகள் “