‘செல்பி’ திரைப்படத்தின் ‘இமைக்காரியே’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!
Selfie Movie Imaikkariye Lyrical Video Is Out
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செல்பி’ திரைப்படத்தின் ‘இமைக்காரியே’ லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சபரீஷ் அவர்களின் தயாரிப்பில், மதி மாறன் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன், வர்ஷா பொல்லம்மா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செல்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 1-யில் திரைக்கு வர இருக்கும் நிலையில் ’இமைக்காரியே’ என்ற இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ ஜி.வி.பிரகாஷ் இசையில் அவரே பாடினால் எந்த பாட்டும் ஹிட்டு தான். அந்த வரிசையில் இந்த பாடலையும் நிச்சயம் சேர்த்து விடலாம் “