மூளையில் ரத்தக் கசிவு, கோமா நிலையில் பாடகி பாம்பே ஜெய ஸ்ரீ!
Singer Bombay Jayashree Hospitalised Idamporul
பிரபல பாடகி பாம்பே ஜெய ஸ்ரீ கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இங்கிலாந்து லிவர்பூல் நகர் ஒன்றில் பொது நிகழ்ச்சிக்காக கலந்து கொள்ள சென்று இருந்த பாடகி பாம்பே ஜெய ஸ்ரீ தீடிரென மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றதாக தெரிகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெகுவிரைவில் நினைவு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ கர்நாடக இசைக்கலைஞரும், பிரபல பாடகியும் ஆன பாம்பே ஜெய ஸ்ரீயின் இந்த நிலைமை அவரது ரசிகர்களை கவலையடைச் செய்து இருக்கிறது “