துணிவு திரைப்படத்தில் ‘சில்லா சில்லா’ வீடியோ பாடல் அப்டேட்!
Chilla Chilla Video Song Update Idamporul
துணிவு திரைப்படத்தின் ‘சில்லா சில்லா’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
‘துணிவு’ திரைப்படத்தில் ஜிப்ரான் இசையில் அனிருத் பாடி இருக்கும் பாடல் தான் ‘சில்லா சில்லா’ பாடல். தியேட்டர்களில் இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில் இந்த பாடலின் வீடியோ பாடலுக்காக ரசிகர்கள் காத்து இருந்தனர். தற்போது நாளை காலை 11 மணிக்கு அப்பாடல் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
” என்ன தான் படமே வெளியானாலும் கூட பாடல் வெளியாகும் போது அதற்கென்று ஒரு தனி வரவேற்பு இருக்க தான் செய்கிறது “