பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கையே, உன் பிரிவால் மிகவும் வாடுகிறோம் – வெங்கட் பிரபு

Venkat Prabhu Sharing Emotional Post On Bhvatharini On Her Birthday Idamporul

Venkat Prabhu Sharing Emotional Post On Bhvatharini On Her Birthday Idamporul

பாவதாரிணி அவர்களின் பிறந்தநாளுக்கு இயக்குநர் வெங்கட்பிரபு உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன் இளையராஜாவின் மகள் மற்றும் பின்னனி பாடகியான பாவதாரிணி, புற்றுநோயால் இலங்கையில் காலமாகி இருந்தார். அவரது இழப்பு சினிமா உலகையே உலுக்கி இருந்த நிலையில், இன்று அவரின் பிறந்த நாளுக்கு கணத்த இதயத்துடன் பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

’பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கையே, நீ எங்கு இருந்தாலும் ஒரு நல்ல இடத்தில் மகிழ்வாக இருப்பாய் என நம்புகிறோம், ஆனாலும் உன் பிரிவு எங்களை வாட்டுகிறது’ என இயக்குநர் வெங்கட் பிரபுவும் பாவதாரிணியின் பிறந்தநாளுக்கு ஒரு உருக்கமான பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.


” உயிர் தானே பிரிந்து இருக்கிறது, இந்த உலகமே உடைந்து நொறுங்கினாலும் கூட உங்கள் குரல், இசையாய் காற்றில் என்றும் மிதந்து கொண்டே இருக்கும் பாவதாரிணி, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாவதாரிணி “

About Author